தென்காசி மாவட்டத்தில் ஒண்டிவீரன் வீரவணக்க நாள் மற்றும் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு, மொத்தமாக ஆறு நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ஒண்டிவீரன் வீரவணக்க நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் நெல்கட்டும்செவல் பகுதியில், இன்று (ஆக. 18) மாலை முதல் ஆக. 21 ஆம் தேதி காலை வரையில் நான்கு நாள்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பூலித்தேவனின் 309 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு, ஆக. 30 ஆம் தேதி முதல் செப். 2 ஆம் தேதி காலை 10 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அறிவிப்பின்படி, 4 பேருக்கு அதிகமானோர் கூடி நின்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நிகழ்ச்சிகளுக்காகவும், தென்காசி மாவட்டத்தில் மொத்தமாக ஆறு நாள்கள் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட இருக்கிறது.