ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கருணாநிதி நினைவு நாணயம் வெளியீடு!

கருணாநிதி உருவம் பொறித்த நூற்றாண்டு நினைவு நாணயத்தை ராஜ்நாத் சிங் வெளியிட, மு.க. ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

News image
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை ராஜ்நாத் சிங் வெளியிட, அதைப் பெற்றுக்கொள்ளும் மு.க. ஸ்டாலின்
Updated On :18 ஆகஸ்ட் 2024, 1:52 pm

DIN

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஆக. 18) வெளியிட்டார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரும் பங்கேற்றனர்.

கலைவாணர் அரங்கிற்கு வந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதல்வர் மு.க. ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்தும் அமைச்சர் துரைமுருகன் துண்டு அணிவித்தும் வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பொன்னாடைப் போர்த்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் கெளரவித்தார். நிகழ்ச்சியில் கருணாநிதி குறித்தும் அவர் கொண்டுவந்த திட்டங்கள் குறித்தும் சிறப்புக் காணொளி திரையிடப்பட்டது.

பின்னர் கருணாநிதி உருவம் பொறித்த நூற்றாண்டு நினைவு நாணயத்தை ராஜ்நாத் சிங் வெளியிட, மு.க. ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.