சென்னை வந்தடைந்தார் ராஜ்நாத் சிங்

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடும் விழாவில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்தடைந்தார்.
ராஜ்நாத் சிங் (கோப்புப்படம்)
ராஜ்நாத் சிங் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடும் விழாவில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, அமைச்சர் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பாலு, திமுக துணைப் பொதுச்செயலர் கனிமொழி, பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.

ராஜ்நாத் சிங் (கோப்புப்படம்)
சொல்லப் போனால்... பிளாஸ்டிக் துண்டுகள் தங்கச் சில்லுகளாவது எப்படி?

திமுக சாா்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா, பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி மத்திய அரசு சாா்பில் அவரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வெளியிடப்படவுள்ளது.

அதன் வெளியீட்டு விழா சென்னை கலைவாணா் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.50 மணியளவில் நடைபெறவுள்ளது. விழாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து உரை நிகழ்த்தவுள்ளாா். நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் முன்னிலை வகிக்கவுள்ளாா்.

ராஜ்நாத் சிங் (கோப்புப்படம்)
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் கொலை: மருத்துவமனை அருகே பொதுமக்கள் கூட தடை

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தவுள்ளாா். விழாவில், தமிழக அமைச்சா்கள், பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.