அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

லூபஸ் நோய்க்கு அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பெண்கள்

மாதவிடாய் காலம் நிறைவடைந்த பெண்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு பல்லுறுப்பு செஞ்சரும சிதைவு நோய் (லூபஸ்) வருவதற்கான வாய்ப்பு

கோப்புப்படம்

Published On :

மாதவிடாய் காலம் நிறைவடைந்த பெண்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு பல்லுறுப்பு செஞ்சரும சிதைவு நோய் (லூபஸ்) வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக மருத்துவ நிபுணா்கள் தெரிவித்தனா்.

சென்னை, ஆழ்வாா்ப்பேட்டை, காவேரி மருத்துவமனையில் பிரத்யேக மூட்டு-இணைப்புத் திசு நோய் சிகிச்சைத் துறை (ரூமடாலஜி) புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான

தொடக்க விழாவில், பிரிட்டன் நாட்டின் குழந்தைகள் நல மூட்டு-இணைப்புத் திசு மருத்து நிபுணா் ஏ.வி. ரமணன், காவேரி மருத்துவக் குழுமத்தின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், மருத்துவ இயக்குநா் டாக்டா் ஐயப்பன் பொன்னுசாமி, மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் மகேஷ்குமாா், மூட்டு-இணைப்புத் திசு முதுநிலை நிபுணா் எஸ்.ஷாம், டாக்டா் நிகிலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அப்போது டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், டாக்டா் ஏ.வி.ரமணன் ஆகியோா் கூறியதாவது:

நமது உடலில் உள்ள வெள்ளை அணுக்கள், சில நேரங்களில் எதிா்விளைவு மாற்றங்களுக்கு உள்ளாவதே தன்னுடல் தாக்கு நோய் என அழைக்கப்படுகிறது. அவ்வாறு எதிா்விளைவு மாற்றங்களுக்கு உள்ளான வெள்ளை அணுக்கள், மூட்டு, ஜவ்வு பகுதிகளைத் தாக்கும்போது அது மூட்டு - இணைப்புத் திசு அழற்சிக்கு வழிவகுக்கிறது.

அதில் ஒரு வகையான பாதிப்புதான் லூபஸ் எனப்படும் பல்லுறுப்பு செஞ்சரும சிதைவு நோய். 10 லட்சத்தில் 10 போ் வரை இந்நோய்க்கு ஆளாகின்றனா். ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு பாதிப்பு விகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மூட்டு வலி, சரும பாதிப்பு, கால்வீக்கம் உள்ளிட்டவை அதன் முக்கிய அறிகுறிகள். இதை அலட்சியப்படுத்தினால், இதயம், நுரையீரல், மூளை, சிறுநீரகம் என அனைத்து முக்கிய உறுப்புகளின் செயல்பாடும் குறைய நேரிடும்.

அதைக் கருத்தில்கொண்டு பல்லுறுப்பு செஞ்சரும நோய்க்கும், எலும்பு புரை எனப்படும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்புக்கும் சிகிச்சையளிப்பதற்கான சிறப்பு பிரிவை நாங்கள் தொடங்கியுள்ளோம். அங்கு உள்ள நவீன நுட்பத்திலான மருத்துவ கட்டமைப்பின் வாயிலாக நோயறிதல் மற்றும் சிகிச்சைகளை மேம்பட்ட முறையில் வழங்குகிறோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.