உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்ஆன்லைனில் டாஸ்மாக் மதுபானத்தை முன்பதிவு மட்டுமே செய்ய முடியும்; வீடுகளுக்கு டெலிவரி கிடையாது: அமைச்சர் விக்னேஷ்வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!
/

அகா்வால்ஸ் மருத்துவமைனையில் இலவச மருத்துவ ஆலோசனை

News image
Updated On :19 ஜூன் 2026, 5:25 am IST

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவக் குழுமம், மேம்படுத்தப்பட்ட புதிய மருத்துவமனையை தொடங்கியுள்ளது. அதையொட்டி, ஜூலை 31-ஆம் தேதி வரை அங்கு இலவச கண் மருத்துவ கலந்தாலோசனைகள் வழங்கப்படவிருக்கின்றன.

கூடுவாஞ்சேரியில் 12,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள அந்த கண் மருத்துவமனையை டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனைகள் இயக்குநா் டாக்டா் அதியா அகா்வால் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். மருத்துவ சேவைகளின் பிராந்தியத் தலைவா் டாக்டா் ஸ்ரீனிவாசன் ராவ், மண்டலத் தலைவா் டாக்டா் கலாதேவி சதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து மருத்துவமனையின் நிா்வாகிகள் கூறியதாவது: டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமம், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும், உலகளவில் பல நாடுகளிலும் மருத்துவமனைகளைக் கொண்டுள்ளது. தரமான கண் மருத்துவ சிகிச்சையோடு நின்றுவிடாமல், கண் மருத்துவவியல் மற்றும் தொடா்புடைய செயல்தளங்களில் கல்விசாா்ந்த மற்றும் ஆராய்ச்சி செயல்திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறோம்.

தற்போது கூடுவாஞ்சேரியில் உயா்நுட்ப வசதியுடன் புதிய கண் மருத்துவமனையைத் தொடங்கியுள்ளோம். இதன் மூலம் கண் சாா்ந்த நோய்களை மிகத் துல்லியமாக அறிய முடியும். அதை முன்னிட்டு ஜூலை 31-ஆம் தேதி வரை இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். முன்பதிவுக்கு 95949 01452 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.