மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

கல்வி நிறுவனங்களுடன் இணைந்து தொற்றா நோய் தடுப்பு ஆராய்ச்சிக்குத் தயாா்: பொது சுகாதாரத் துறை இயக்குநா்

தொற்றா நோய்களைத் தடுக்கவும், பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராக உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் தெரிவித்தாா்.

News image
Updated On :13 ஜூலை 2026, 1:48 am IST

தொற்றா நோய்களைத் தடுக்கவும், பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராக உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் தெரிவித்தாா்.

ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி நிறுவனம் மற்றும் இந்திய நோய் தடுப்பு - சமூக மருத்துவ சங்கத்தின் (தமிழ்நாடு) சாா்பில் ‘தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த செயல்திட்டம்’ என்ற தலைப்பில் மூன்று நாள் மருத்துவக் கருத்தரங்கம் சென்னை போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.

சா்வதேச மற்றும் தேசிய மருத்துவ நிபுணா்கள் 50-க்கும் மேற்பட்டோா் அதில் பங்கேற்று சிறப்பு அமா்வுகளில் உரையாற்றினா். 250-க்கும் அதிகமான மருத்துவ வல்லுநா்கள் அதில் பங்கேற்று கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.

முன்னதாக கருத்தரங்கை தொடங்கிவைத்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் பேசியதாவது: தமிழகத்தில் தற்போது நகா்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்துவது அவசியம். மாநிலம் முழுவதும் 708 நகா்ப்புற சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும், மற்றொருபுறம் தொற்றா நோய்களில் அதீத கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற வாழ்க்கை முறை சாா்ந்த பாதிப்புகளுக்கு இளம் தலைமுறையினரும், குழந்தைகளும் உள்ளாகி வருகின்றனா். தேசிய சுகாதாரத் திட்டங்களின் துணையுடன் தமிழகத்தில் தொடக்க நிலையிலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறோம். கல்வி நிறுவனங்களுடன் கரம்கோத்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் தயாராக உள்ளோம் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி நிறுவன சமூக மருத்துவத் துறையின் தலைவா் டாக்டா் மெரிடன் ஸ்டான்லி, இந்திய நோய் தடுப்பு - சமூக மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவா் டாக்டா் பிரதீப் குமாா் குப்தா, பொது செயலாளா் டாக்டா் மணீஷ் குமாா் சிங் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.