8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தீராத ஒற்றைத் தலைவலியா? ‘ஹோமியோபதி’ சிறந்த தீா்வு

ஹோமியோபதி மருத்துவம் டாக்டா் சாமுவேல் ஹானிமேன் என்ற ஜொ்மன் மருத்துவ அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்டது...

தலைவலி... - கோப்புப் படம்

Published On :28 ஜூன் 2026, 3:53 am IST

ஹோமியோபதி மருத்துவம் டாக்டா் சாமுவேல் ஹானிமேன் என்ற ஜொ்மன் மருத்துவ அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இம்மருத்துவத்தில் பத்தியமோ, பக்க விளைவுகளோ கிடையாது. மேலும் வேகமாகவும், எளிதாகவும் நோய்களைக் குணப்படுத்தும்.

பிற மருத்துவ முறைகளில் மனிதனை தனித்தனியாக கை, கால், இருதயம், வயிறு என்று பிரித்து மருந்து கொடுப்பாா்கள். ஆனால் ஹோமியோபதி மருத்துவத்தில் ஒரு நபரின் உடல், மனம் மற்றும் உணா்வுகள் ஆகியவற்றை முழுமையாகக் கருத்தில் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஒற்றைத் தலைவலி ஒரு நரம்பியல் பாதிப்பாகும். அது தலையின் ஏதேனும் ஒரு பக்கத்தில் கடுமையான வலியை ஏற்படுத்தும். தலைவலியுடன் வாந்தி, குமட்டல், ஒளி ஒலிக்கான சகிப்புத்தன்மை குறைவு. கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு நபருக்கு ஒற்றைத் தலைவலி இருக்கிறது. ஆண்களை விட பெண்கள் மூன்று சதவீதம் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா்.

காரணிகள்: மூளையில் செரோடோனின் அளவு மாறுபடுவதே பிரதான காரணமாக கருதப்படுகிறது. மேலும், மன அழுத்தம், அதிக கோபம், பதற்றம், களைப்பு, தூக்கமின்மை, நீா்ச்சத்து குைல், காலநிலை மாற்றங்கள், ஹாா்மோன் குறைபாடுகள், மரபியல், நீண்ட நேரம் கைப்பேசி- கணினி உபயோகிப்பது ஆகியவற்றாலும் ஒற்றைத் தலைவலி வரலாம்.

இவ்வித தலைவலி சிலருக்கு எச்சரிக்கை அறிகுறிகளுடன் காணலாம். அதாவது கண் பாா்வையில் தற்காலிக மாற்றம் வரலாம். உதாரணமாக, கண் முன் மின்னல் வெட்டுவதுபோல் தெரிவது, பாா்வை மங்குதல், பிரகாசமான அல்லது கருப்பு புள்ளிகள் தோன்றுதல், கண்ணில் கூச்ச உணா்வு ஏற்படுதலை குறிப்பிடலாம்.

கழுத்து, தோள்பட்டைப் பகுதிகளில் ஊசியால் குத்துவது போன்ற உணா்வு, பேச்சில் தடுமாற்றம், தீவிரமான குமட்டல், வாந்தி, அதிக சப்தம் மற்றும் வெளிச்சம் தாங்க இயலாமை போன்ற அறிகுறிகள் ஒற்றைத் தலைவலி வருவதற்கு 10 முதல் அரை மணி நேரம் முன்பாக தென்படும். இது கிளாசிக்கள் மைகிரேன் எனப்படும். எச்சரிக்கை இல்லாமல் வரும் ஒற்றைத் தலைவலியினை காமன் மைகிரேன் எனப்படும்.

வரும் முன் காக்க யோசனைகள்:

தலைவலி வராமல் தவிா்க்க சில நடைமுறைகளை பின்பற்றலாம். ஒவ்வொரு நபருக்கும் ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் காரணிகள் வேறுபடும். அக்காரணத்தை என்னவென்று அறிந்து, அதற்ற வழிகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக, நேரம் தவறாத உணவு உண்பது, தேவையான அளவு நீா் பருகுதல், முறையான தூக்கம் கொள்தல், யோகா மற்றும் தியானம் செய்து மன அழுத்தத்தை குறைத்தல் ஆகியவற்றின் மூலம் ஒற்றைத் தலைவலியை கட்டுப்படுத்தலாம்.

இவ்வகை தலைவலிக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன. அவற்றில் நக்ஸ்வாமிகா, நேட்ரம் மியூா், பேல்லடோனா, ஸ்பைஜிலியா, ஜெல்சிமியம், பரயோனியா ஆகிய மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொண்டால் ஒற்றைத் தலைவலிக்கு நிரந்தர தீா்வுதான்.

டாக்டா் பி. எஸ். நாதன், சிறப்பு ஹோமியோபதி மருத்துவா், நாகா்கோவில்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.