

தேமுதிக தலைமை அலுவலகம் இனி "கேப்டன் ஆலயம்" என அழைக்கப்படும் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தேமுதிக நிறுவனரும், தமிழக சட்டப்பேரவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் சிலையை அவர் திறந்துவைத்தார். இருந்தாலும் மறைந்தாலும் அன்னதானத்தை கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த். எனவே, விஜயகாந்த் பிறந்த நாள் வறுமை ஒழிப்பு தினமாகவும், அன்னதான தினமாகவும் கடைபிடிக்கப்படும் என்று பிரேமலதா அறிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், இன்று முதல் தேமுதிக தலைமை அலுவலகத்தின் பெயர் கேப்டன் ஆலயம் என அழைக்கப்படும். புதிதாக யூ டியூப் சேனல் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, திரைப் பிரபலங்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து வந்த ஏராளமான கட்சித் தொண்டர்கள் தேமுதிக தலைமை அலுவலகத்தில் குவிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.