உலகின் கவனத்தை ஈர்க்க வெளிநாட்டுப் பயணம்: மு.க. ஸ்டாலின்

உலகத்தின் கவனத்தை தமிழகத்தை நோக்கி ஈர்க்க வெளிநாட்டு பயணங்கள் மிக முக்கியமானவை என முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆக. 27) தெரிவித்தார்.
மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

உலகத்தின் கவனத்தை தமிழகத்தை நோக்கி ஈர்க்க வெளிநாட்டு பயணங்கள் மிக முக்கியமானவை என முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆக. 27) தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆக. 27) இரவு அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,

முதலீடுகளை ஈர்க்க மகிழ்ச்சியுடன் அமெரிக்கா செல்கிறேன். திமுக ஆட்சியில் ரூ.9.99 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஒப்பந்தங்களால் 18.89 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும்.

3 ஆண்டுகளில் மட்டும் 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. போடப்பட்ட 872 ஒப்பந்தங்களில் 234 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 4 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது.

முதலீடுகள் மூலம் 2030-க்குள் ஒரு டிரில்லியன் பொருளாதார இலக்கை தமிழ்நாடு அடையும். தொழில் முதலீடுகள் முழுமையாக வந்தபிறகு அரசின் சார்பில் அறிக்கை வெளியிடப்படும்.

உலகத்தின் கவனத்தை தமிழகத்தை நோக்கி ஈர்க்க வெளிநாட்டு பயணங்கள் மிக முக்கியமானவையாக உள்ளது. முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டுப் பயணங்களை அதிகம் மேற்கொண்டு வருகிறேன். வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதால் தமிழ்நாட்டிற்கு பல்வேறு முதலீடுகள் வந்துள்ளன.

மு.க. ஸ்டாலின்
உடைந்த இடத்தில்... சத்ரபதி சிவாஜிக்கு 100 அடி சிலை?

நிறுத்திவைத்துள்ள கல்வி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அமைச்சர் துரைமுருகனும் ரஜினிகாந்தும் நீண்டகால நண்பர்கள். இதை அவர்கள் இருவருமே கூறிவிட்டனர். இதனை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர பகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக்கூடாது எனத் தெரிவித்தார்.

அமெரிக்க பயணம் முடிந்தவுடன் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பொறுத்திருந்து பருங்கள் என பதில் அளித்தார். மாற்றம் ஒன்றே மாறாதது எனவும் முதல்வர் குறிப்பிட்டார்.

மு.க. ஸ்டாலின்
சொல்லப் போனால்... நள்ளிரவில் நடுவீதியில் நகைகள் அணிந்து நடக்கும் பெண்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com