இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

குரங்கு அம்மை: 200 மருத்துவர்களுக்குப் பயிற்சி - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி.

Published On :27 ஆகஸ்ட் 2024, 12:59 pm IST

குரங்கு அம்மை பாதிப்பு தமிழகத்தில் இல்லை என்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள குரங்கு அம்மை பிரிவை ஆய்வு செய்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், அது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கத்தை தொடக்கிவைத்தார்.

Story image

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், 'குரங்கு அம்மை என்பது பெரியம்மையின் தொடர்ச்சிதான். பெரியம்மை சிகிச்சைக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைதான் குரங்கு அம்மைக்கும் அளிக்கப்படும்.

பருவமழையின்போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும். சென்னை மாநகராட்சியும் தமிழ்நாடு அரசும் கொசு ஒழிப்புப் பணி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

டெங்கு பாதிப்பு என்பது தற்போது கட்டுக்குள்தான் இருக்கிறது. எனினும் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் டெங்கு பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். செப். 2 ஆம் தேதி உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை இணைந்து ஒரு கூட்டம் நடத்தப்பட உள்ளது.

குரங்கு அம்மை சிகிச்சைக்காக பிரத்யேக வார்டுகள் சென்னை, கோவை, திருச்சி, மதுரை அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ளன. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டால் அனைத்து முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.

Story image

அனைத்து விமான நிலையங்களிலும் துறைமுகப் பகுதிகளும் சோதனைக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கென சிறப்பு மருத்துவக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் குரங்கு அம்மை சிகிச்சை தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடைபெறுகிறது. இதில் 200 மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

Story image

தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இதுவரை எதுவும் இல்லை. குரங்கு அம்மை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தனியார் மருத்துவமனைகளையும் கண்காணித்து வருகிறோம்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.