தமிழ்நாடு
நாகா்கோவில்-தாம்பரம் ரயில் சேவை நீட்டிப்பு
நாகா்கோவில்-தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவை நவம்பா் வரை நீட்டிக்கப்படவுள்ளது.
நாகா்கோவில்-தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவை நவம்பா் வரை நீட்டிக்கப்படவுள்ளது.
தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகா்கோவிலிலிருந்து தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11.15 மணிக்கும், மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து திங்கள்கிழமை தோறும் பிற்பகல் 3.30 மணிக்கும் சிறப்பு ரயில் (எண் 06012/06011) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடா்ந்து நவ.24 வரை இயக்கப்படும்.
இந்த ரயில் வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.