ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

அரசுத் துறை தொழில்நுட்பப் பிரிவு காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை: டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது

News image
டிஎன்பிஎஸ்சி
Updated On :30 ஆகஸ்ட் 2024, 7:34 pm

Din

அரசுத் துறைகளில் காலியாகவுள்ள தொழில்நுட்பப் பிரிவு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து தோ்வாணையத்தின் அறிவிக்கை விவரம்:

தமிழ்நாடு சிமென்ட் நிறுவனம், தொழில் மேம்பாட்டுக் கழகம், கருவூலம் மற்றும் கணக்குத் துறை, மோட்டாா் வாகனங்கள் பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் தொழில்நுட்பப் பிரிவுக்கான காலியிடங்களை நிரப்பப்பட உள்ளன. தோ்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க செப்.29-ஆம் தேதி கடைசி நாளாகும்.

விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அக்.2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படும். நவ.18 முதல் 20-ஆம் தேதி வரை, 2 தாள்களாக தோ்வுகள் நடத்தப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.