திராவிட சித்தாந்தத்தையே விஜய் பேசுகிறார்: சென்னை திரும்பிய அண்ணாமலை பேட்டி

திராவிட சித்தாந்தத்தையே விஜய் பேசுகிறார் என்று நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை திரும்பிய அண்ணாமலை.
சென்னை திரும்பிய அண்ணாமலை.
Published on
Updated on
1 min read

திராவிட சித்தாந்தத்தையே விஜய் பேசுகிறார் என்று நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

மூன்று மாத கால லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் கரூர் நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அண்ணாமலையை வரவேற்றனர். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 3 மாதங்களில் பாஜக உறுப்பினர் சேர்க்கை வெற்றிகரமாக நடந்துள்ளது.

உறுப்பினர் சேர்க்கைக்கு உழைத்த ஹெச்.ராஜா உள்பட மூத்த தலைவர்களுக்கு நன்றி. உட்கட்சி தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. தமிழக பாஜகவில் கிளைத் தலைவர் முதல் மாநிலத் தலைவர் வரை தேர்தல் நடக்கிறது. அரசியல் படிப்பு தொடர்பாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முன்னாள் பிரதமர்கள் பாடம் எடுத்தார்கள். 3 மாத காலம் எனக்கு கிடைத்த பாக்கியம்.

ஐசிசியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற ஜெய் ஷா!

3 மாதங்களில் தமிழக அரசியல் களத்தில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறோம். விஜயின் அரசியல் வருகை மக்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திராவிட சித்தாந்தத்தையே விஜய் பேசுகிறார். புதிதாக ஒன்றும் அவர் பேசவில்லை. தீவிர அரசியல் செயல்பாட்டுக்கு பிறகே விஜய் குறித்து பாஜக விமர்சனம் செய்யும்.

துணை முதல்வர் உதயநிதியின் செயல்பாடுகளை பொறுத்து பாஜக உரிய விமர்சனம் செய்யும். பாஜகவை பொறுத்தவரை புதிய கட்சிகளுக்கு பயப்படாது. 2026 மிக முக்கிய சரித்திர தேர்தலாக இருக்கப் போகிறது. திமுக, ஆம் ஆத்மி வித்தியாசமான முறையில் பயணிக்கிறது. சிறையில் சென்று வந்த செந்தில் பாலாஜியை காந்தியவாதியைப் போல் கொண்டாடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com