கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஹெச். ராஜாவுக்கு இரு வழக்குகளில் தலா 6 மாதங்கள் சிறை!!

அவதூறு பரப்பிய வழக்குகளில் ஹெச். ராஜாவுக்கு சிறை தண்டனை விதித்திருப்பது பற்றி...

News image
ஹெச்.ராஜா- கோப்புப் படம்
Updated On :2 டிசம்பர் 2024, 6:16 am

DIN

பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு இரு வழக்குகளில் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பெரியார் சிலை உடைப்பது, அறநிலைத்துறை அதிகாரிகளின் குடும்பத்தினரை அவதூறாக பேசியது, திமுக எம்பி கனிமொழி குறித்து அவதூறாக பேசியது உள்பட 11 வழக்குகள் ஹெச்.ராஜா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு விசாரணையை முடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு நகரம் மற்றும் கருங்கல்பாளையம் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்குகளில் காவல்துறையால் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெரியார் சிலையை உடைப்பேன் மற்றும் கனிமொழி குறித்து அவதூறாக பதிவிட்ட வழக்குகளில் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மேல்முறையீடு செய்ய அவகாசம் அளித்து சிறை தண்டனையை நிறுத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.