ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

அரையாண்டுத் தேர்வு மாற்றமா? - அமைச்சர் விளக்கம்

அரையாண்டுத் தேர்வுகள் எந்த மாற்றமுமின்றி வருகிற டிச. 9 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்.

News image

அன்பில் மகேஸ் பொய்யாமொழி

Updated On :4 டிசம்பர் 2024, 12:23 pm IST

பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் எந்த மாற்றமுமின்றி வருகிற டிச. 9 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. தொடர்ந்து விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழைபெய்துள்ளது. இன்னும் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள பள்ளி அரையாண்டுத் தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் இதுகுறித்து,

'பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் எந்த மாற்றமுமின்றி வருகிற டிச. 9 ஆம் தேதி முதல் நடைபெறும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் டிசம்பர் 9 ஆம் தேதிக்குள் இயல்பு நிலை திரும்பவில்லை எனில், அந்த பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவு செய்வார்கள்.

டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கவிருந்த செய்முறைத் தேர்வு வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஜனவரி முதல் வாரத்தில் நடத்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.