கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

திட்டக்குழு துணைத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்!

மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவராக உதயநிதி ஸ்டாலினை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
Updated On :5 டிசம்பர் 2024, 8:22 am

DIN

மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவராக உதயநிதி ஸ்டாலினை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் மாநில திட்டக்குழுவின் தலைவராக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளார். துணைத் தலைவராக ஜெயரஞ்சன் மற்றும் இதர உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திட்டக்குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையி்ன் அமைச்சர் என்ற முறையில் உதயநிதி அலுவல்சாரா துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

துணைத் தலைவராக இருந்த ஜெயரஞ்சன் செயல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர, தமிழக தலைமைச்செயலர் நா.முருகானந்தம் அலுவல்சாரா உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இரு முழு நேர உறுப்பினர்களும், 7 பகுதி நேர உறுப்பினர்களும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.