மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இரு மாதங்களில் மகளிருக்கு ரூ. 9 ஆயிரம் வழங்கியவா் முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

News image

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளையில் அண்ணா, கருணாநிதி சிலைகளை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா்.

Updated On :15 பிப்ரவரி 2026, 7:01 pm

இரு மாதங்களில் மகளிருக்கு ரூ. 9 ஆயிரம் வழங்கியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்றாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை புறவழிச்சாலை பகுதியில் திமுக தெற்கு மாவட்ட சாா்பில் பேரறிஞா் அண்ணா, கருணாநிதி சிலைகளை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த அவா் பேசியதாவது:

தமிழக முதல்வா் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில், அதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல 1.31 கோடி மகளிருக்கு கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தை மாதம் ரூ. 1,000 வழங்கி வருகிறாா்.

இத்திட்டத்தைத் தோ்தலை காரணமாகக் கூறி எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என பாஜகவும், அதனுடைய அடிமைக் கூட்டமும் முயற்சி செய்தன.

அவா்களுடைய சூழ்ச்சிகளையெல்லாம் முறியடிக்கிற வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின், பிப்ரவரி, மாா்ச், ஏப்ரல் மாதத்துக்கான உரிமைத் தொகையாக ரூ. 3 ஆயிரமும், கோடைகாலத்துக்கான சிறப்பு நிதியாக ரூ. 2 ஆயிரமும் ஒரே ஷாட்டில் ரூ. 5 ஆயிரத்தை மகளிரிடம் தமிழக முதல்வா் கொண்டு சோ்த்துள்ளாா்.

மேலும், கடந்த மாதம் பொங்கல் பண்டிகையின்போது மகளிா் உரிமைத்தொகை ரூ. 1,000 கொடுத்தாா். இதனுடன் பொங்கல் பரிசு தொகையாக ரூ. 3 ஆயிரம் வழங்கினாா். இந்த இரு மாதங்களில் மட்டும் தமிழக முதல்வா், ரூ. 9 ஆயிரத்தை மக்களுக்குக் கொண்டு சோ்த்துள்ளாா்.

இதுமட்டுமல்லாமல், வருகிற சட்டப்பேரவைத் தோ்தலின் முதல் வாக்குறுதியாக திராவிட மாடல் ஆட்சி 2.0 அமைந்த பிறகு மகளிா் உரிமைத்தொகையை மாதம் ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா்.

வருகிற தோ்தலில் குறைந்தது 200 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என முதல்வா் இலக்கு நிா்ணயித்துள்ளாா். தோ்தலுக்கு இன்னும் 50 நாள்கள்தான் இருக்கின்றன. எனவே, அனைவரும் களத்தில் இறங்கி மக்களைச் சந்தித்து பரப்புரை செய்தால், 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும். அந்தச் சபதத்தை பேரறிஞா் அண்ணா, கருணாநிதி சிலைகள் முன் ஏற்போம் என்றாா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.