செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை
செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை

விஜய்யுடன் மணிப்பூர் செல்லத் தயார்: அண்ணாமலை

தவெக தலைவர் விஜய்யை அழைத்துக்கொண்டு மணிப்பூர் செல்லத் தயார் என்றார் அண்ணாமலை.
Published on

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை அழைத்துக்கொண்டு மணிப்பூர் செல்லத் தயார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் மணிப்பூர் குறித்து விஜய் பேசிய நிலையில், இதற்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களுடன் அண்ணாமலை பேசியதாவது,

''தமிழகத்தில் அம்பேத்கரை வைத்து அரசியல் வியாபாரம் நடப்பதற்கு புத்தக வெளியீட்டு விழா உதாரணம்.

ஆனந்த் டெல்டும்டே ஒரு நகர்புற நக்சலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி. லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூனா, ஆனந்த் டெல்டும்டேவுக்கு விகடன் மேடை கொடுத்தது ஏன்? அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட வேறு ஆள்களே இல்லையா?

மன்னராட்சி என்று சொல்கிறீர்களே அதற்கு உறுதுணையாக இருந்தது யார்?

விசிக திருமாவளவன் கையில் உள்ளதா? துணைப் பொதுச்செயலாளர் கையில் உள்ளதா?.

திருமாவளவன் செல்லாத நிகழ்ச்சிக்கு அவரின் கட்சியைச் சேர்ந்த ஆதவ் அர்ஜூனா எப்படிச் சென்றார்? ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க திருமாவளவன் தயங்குவது ஏன்?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் கையில் இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தலைவரா? அல்லது இரண்டு தலைவர்களா? திருமாவளவன் செல்லாத நிகழ்ச்சிக்கு ஆதவ் அர்ஜூனா எப்படிச் சென்றார்?

விஜய் குறித்து...

விஜய்யை அரசியலுக்கு அன்போடு வரவேற்கிறேன். விஜய் மணிப்பூர் வரத் தயாராக இருந்தால், அவரை மணிப்பூர் அழைத்துச்செல்லத் தயாராக உள்ளேன்.

அரசியல் கருத்து சொல்வதற்கு முன்பு அது குறித்து தெரிந்துகொண்டு விஜய் பேச வேண்டும். மணிப்பூரின் புவியியல் அமைப்பு, பழங்குடிகள் பிரச்னை போன்றவற்றை விஜய் தெரிந்துகொள்ள வேண்டும்.

அங்குள்ள போராட்டக்காரர்கள் முதல்வரின் வீட்டை தீயிட்டு கொளுத்தினர். ஆனால், அப்போது துப்பாக்கிகளைப் பயன்படுத்தவில்லை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். துப்பாக்கியை பயன்படுத்துவது நோக்கம் அல்ல'' எனக் குறிப்பிட்டார்.

மேலும், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பாஜக கொண்டுவந்த திட்டங்கள் குறித்தும் அண்ணாமலை பட்டியலிட்டார்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... அடுத்தது அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com