
திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி கோயிலைச் சுற்றிலும் 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சாலையில் வாகனங்களை நிறுத்திச்சென்றால் அபராதம் விதிக்கப்படும் என காவல் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்றது. கார்த்திகை தீபத்திற்கான பரணி தீபம் டிசம்பர் 13ஆம் தேதியான வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்றப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை மகா தீபம் ஏற்றப்படும்.
தீபத் திருவிழாவையொட்டி காவல் துறை தரப்பில் பக்தர்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
காவல் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
திருவண்ணாமலையில் மகா தீபத்தையொட்டி, பக்தர்கள் போக்குவரத்து நெரிசலின்றி வழிபட ஏதுவாக, 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், 116 பார்க்கிங் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் பார்க்கிங் இடங்கள் தொடர்பாக திருவண்ணாமலை காவல் துறைக்கு வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பினால், வரைபடத்துடன் கூடிய தரவுகளை காவல் துறை அனுப்பிவைக்கிறது. இதனைப் பயன்படுத்தி பக்தர்கள் போக்குவரத்து நெரிசலின்றி தீபத் திருவிழாவில் பங்கேற்கலாம்.
வாடகை பேருந்துகள் உள்பட அனைத்து பேருந்துகளும் தற்காலிக பேருந்து நிலையங்களிலேயே நிறுத்த வேண்டும்.
சாலைகளில் வாகனங்களை நிறுத்திச் சென்றால் அபராதம் விதிக்கப்படும்.
கோயிலின் நான்கு கோபுரங்களின் முன்போ, கிரிவலப் பாதையிலோ பக்தர்கள் கற்பூரம் ஏற்றக் கூடாது.
அனுமதி மறுக்கப்பட்டுள்ள இடங்களில் அன்னதானம் வழங்கக் கூடாது
மாவட்ட காவல் துறை சார்பில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | டங்ஸ்டன் சுரங்கமா? அனுமதித்தால் நான் முதல்வராக இருக்க மாட்டேன்: மு.க. ஸ்டாலின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.