மாநில அரசு மனது வைத்தால் நீதிமன்றங்களில் தமிழ் அலுவல் மொழியாகும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்
மாநில அரசு மனது வைத்தால் நீதிமன்றங்களில் தமிழ் அலுவல் மொழியாகும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்தார்.

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தினமணி சார்பில் புதன்கிழமை நடைபெற்ற மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழாவில் சுதந்திரப் போராட்ட வீரரும், ஓய்வு பெற்ற ஆட்சிப் பணி அதிகாரியுமான தியாகி லட்சுமிகாந்தன் பாரதிக்கு விருது வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன். உடன், (இடமிருந்து) மதுரைக் கல்லூரி முன்னாள் துணை முதல்வர் கே. முத்துவேல், மாநகர போக்குவரத்துப் பிரிவு காவல் துணை ஆணையர் எஸ். வனிதா, மூத்த வழக்குரைஞர் டி.எஸ்.ஆர். வேங்கடரமணா, மதுரைக் கல்லூரி வாரியத் தலைவர் சங்கர சீத்தாராமன், தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும விளம்பரப் பிரிவு முதுநிலை துணைத் தலைவர் ஜெ. விக்னேஷ்குமார், சேதுபதி மேல்நிலைப் பள்ளி செயலர் எஸ். பார்த்தசாரதி, கவிஞர் ஜெயபாஸ்கரன்.










