ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தர்மயுகத்தை நோக்கி நாட்டை வழி நடத்துகிறார் பிரதமர் மோடி: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

கன்னியாகுமரி சாமிதோப்பில் நடைபெற்ற அகிலத்திரட்டு அம்மானை உதயதின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் பேசியது...

News image
கன்னியாகுமரி சாமிதோப்பில் நடைபெற்ற அகிலத்திரட்டு அம்மானை உதயதின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி
Updated On :12 டிசம்பர் 2024, 8:24 am

DIN

நாகர்கோவில்: தர்மயுகத்தை நோக்கி இந்தியாவை வழிநடத்தி செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி என்றார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற அகிலத்திரட்டு அம்மானை உதயதின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, புனித அகிலத்திரட்டு அம்மானை நூலை வெளியிட்டார்.

பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:

'நான் 3-ஆவது முறையாக அய்யா வைகுண்டர் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறேன். இதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.

எப்போதெல்லாம் தர்மத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போது நான் அவதாரம் எடுப்பேன் என்று நாராயணர் புனித நூலில் கூறியிருக்கிறார். சநாதன தர்மம் என்பது எல்லோரும் சமம், யாரும் உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை, நாம் அனைவருமே கடவுளின் பரிணாமம் என்பதே ஆகும்.

சநாதன கோட்பாட்டுக்கு வெளியே யாரும் இல்லை. நாம் அனைவரும் ஒரே குடும்பம், பாரதம் சநாதன தர்மத்தின் அடிப்படையில் அமைந்த நாடு. கலியுகத்துக்கு பின் தர்மயுகம் தோன்றும் என்று அகிலத்திரட்டு அம்மானை குறிப்பிடுகிறது.

அந்த வகையில், தர்மயுகத்தை நோக்கி இந்தியாவில் 140 கோடி மக்களையும் நமது பிரதமர் நரேந்திர மோடி வழிநடத்தி செல்கிறார்' என்றார் .

முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவி, தென்தாமரைகுளம் பதியில், அய்யா வழி ஆராய்ச்சி நிலையத்துக்கு அடிக்கல் நாட்டி, அங்கிருந்து அகிலத்திரட்டு அம்மானை உதயதின ஊர்வலத்தை தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஏராளமான அய்யாவழி மக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.