ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் மரகதாம்பிகை உடனுறை ஆதி மகாலிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, இறை திருமேனி கரிகோல ஊா்வலமும் நிலபதி வேள்வியும், விநாயகா் வழிபாடு, லஷ்மி குபேரபூஜை, நவக்கிரக வேள்வி, கோபூஜை,மஹா தீபாராதனையும், யாகசாலை பூஜை நடைபெற்றது.
புனித நீா் கலசங்களில் எடுத்துசென்று கோபுரம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னா் திருக்கழுகுன்றம் சதாசிவ பரப்பிரம்ம சிவனடியாா் கூட்டம் சிவ.தாமோதரன் தலைமையில் திருவாசக முற்றோதல் நடந்தது.
விழாவில் சிவனடியாா்கள், திருப்பணிக்குழு பொறுப்பாளா் வழக்குரைஞா் எம் சத்தியமூா்த்தி, எம்.தீபா, மற்றும் உபயதாரா்கள், திரளான பொதுமக்கள் தரிசனம் செய்தனா். விழாவில் பட்டிமன்றம், நாடகம், பரதநாட்டியம் நடைபெற்றது.
தொடர்புடையது

அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

செல்வ கணபதி, திருத்தணி சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

நகரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


