ஒரே நாடு ஒரே தேர்தலை முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆதரித்திருப்பதாகக் குறிப்பிட்டு முதல்வரை ஹெச். ராஜா விமர்சித்துள்ளார்.
பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ஹெச். ராஜா காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில்,
``இந்துக்களின் ரூ. 1,185 கோடி நன்கொடையில்தான் கோயில்களின் கும்பாபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், முதல்வரின் வழிகாட்டுதலின்படி, பக்தர்களின் நன்கொடையில் கோயில்களில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்படுவதாய் அமைச்சர் கூறுகிறார்.
தங்கள் பக்தியின் காரணமாக அவரவர் கும்பாபிஷேகம் நடத்தினால், அதையும் அறநிலையத்துறை தட்டி பறிக்குமா? அறநிலையத்துறை எதற்காக உள்ளது? தமிழ்நாட்டில் இந்து விரோத அரசுதான் நடக்கிறது.
இதையும் படிக்க: அருமையான பேச்சு.. பிரியங்காவைப் பாராட்டிய ராகுல்!
ஒரே நாடு, ஒரே தேர்தலை ஆதரிப்பதாக முதல்வரின் தந்தையே நெஞ்சுக்கு நீதியில் கூறியுள்ளார். தந்தையின் பேச்சை மதிக்காத பிள்ளை, என்ன பிள்ளை?
ஒன்றரை மாதத்திற்கு முன்னரே, சென்னை மட்டுமில்லாமல் மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட மற்ற மாவட்டங்கள் மீதும் கவனம் செலுத்துமாறு கூறியிருந்தேன். ஆனால், தற்போது விழுப்புரம், திண்டிவனம், கிருஷ்ணகிரி, டெல்டா மாவட்டங்கள் வரையில் சேதத்திற்கு ஆளாகியுள்ளன’’ என்று கூறினார்.
அதுமட்டுமின்றி, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆதரவு தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு, அதைப் பற்றி அதிகம் பேச வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு, மறைந்த அவரது தந்தை கருணாநிதி கடிதம் எழுதுவதுபோல சித்திரிப்பு பதிவையும், ஹெச். ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ முறையால் ரூ.7 லட்சம் கோடி மிச்சமாகும்: நாடாளுமன்ற கூட்டுக்குழுத் தலைவா்

கோவில்பட்டி எம்எல்ஏவுக்கு வரவேற்பு

சங்கரன்கோவிலில் திமுக எம்.எல்.ஏ.வுக்கு வரவேற்பு
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



