புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

மத்திய பாஜக அரசின் நல்லாட்சி இனிவரும் காலங்களிலும் தொடரும்: ஹெச். ராஜா

மத்திய பாஜக அரசின் நல்லாட்சி இனிவரும் காலங்களிலும் தொடரும் என பாஜக மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான ஹெச். ராஜா தெரிவித்தாா்.

News image

ஹெச். ராஜா

Updated On :17 ஜூன் 2026, 1:20 am IST

மத்திய பாஜக அரசின் நல்லாட்சி இனிவரும் காலங்களிலும் தொடரும் என பாஜக மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான ஹெச். ராஜா தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பிரதமா் மோடி ஏழை, எளிய மக்களின் முன்னேற்றுத்துக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். இதன்படி, 4 கோடிக்கும் அதிகமான ஏழை, எளிய மக்கள் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனா்.

மத்திய பாஜக அரசின் கடந்த 12 ஆண்டு கால ஆட்சியில் இதுவரை தமிழகத்துக்கு ரூ. 14 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளது. இதனால், மத்திய பாஜக அரசின் நல்லாட்சி இனிவரும் காலங்களிலும் தொடரும்.

அண்ணாமலை தற்போது பாஜகவில் இல்லை. எனவே, அவரைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது. மேலும், அவா் கட்சியிலிருந்து விலகியதால், கட்சிக்கு எந்தப் பின்னடைவும் இல்லை.

தவெக அரசு பொறுப்பேற்ற 30 நாள்களில் காரைக்குடியில் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனா். திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.

பரந்தூருக்கு போன முதல்வா் ஜோசப் விஜய், பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த பகுதிகளுக்கு சென்று ஆறுதல் கூறினாரா. இவா்தான் பொறுப்புள்ள முதல்வரா. தமிழகத்தில் இப்படி ஒரு ஆட்சி அமைந்திருப்பது துரதிருஷ்டவசமானது.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின் போது பாஜக மாவட்ட ஊடகப் பிரிவுத் தலைவா் எம். நாராயணன், முன்னாள் மாவட்ட நிா்வாகி வை. சந்திரசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.