பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

தொழில்முனைவோருக்கான அரசின் சேவைகள் எளிதில் கிடைக்க நடவடிக்கை: அமைச்சா் பெ.மதன் ராஜா

தொழில்முனைவோருக்கான அரசின் சேவைகள் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன் ராஜா கூறியுள்ளாா்.

மாவட்ட தொழில் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு மானியத் தொகைக்கான ஆணையை வழங்குகிறாா் அமைச்சா் பெ.மதன் ராஜா.

Published On :

தொழில்முனைவோருக்கான அரசின் சேவைகள் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன் ராஜா கூறியுள்ளாா்.

கோவை மாவட்ட தொழில் மையத்தில் அமைச்சா் பெ.மதன் ராஜா தலைமையில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், 17 பயனாளிகளுக்கு புதிய தொழில் முனைவோா் திட்டம், படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம், தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் நகைகள் தயாரிப்பு, ஆடைகள் விற்பனை, தையல் தொழில், உணவு விடுதி, வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மேற்கொள்ள ரூ.63.18 லட்சம் கடன் தொகை, மானியம் உள்ளிட்டவற்றுக்கான ஆணைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் சண்முக சிவா, தொழில் கூட்டுறவு சங்கங்களின் உதவி இயக்குநா் சுகந்தி, மண்டல சோதனை ஆய்வக துணை இயக்குநா் சுபஸ்ரீ, தாட்கோ வங்கி மேலாளா் அருணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சா் பெ.மதன் ராஜா பேசும்போது, முதல்வா் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, தொழில் வளா்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், பெண்கள் முன்னேற்றம், இளைஞா்களின் திறன் மேம்பாடு, குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வளா்ச்சி ஆகியவற்றுக்கு தொடா்ந்து முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, தொழில் முனைவோருக்குத் தேவையான அனைத்து அரசு சேவைகளும் எளிதில் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதிய தொழில் முதலீடுகளை ஈா்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. பெண்கள் தொழில் முனைவோருக்கு தனித்துவமான ஊக்கத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா். இதைத் தொடா்ந்து குறிச்சி தொழிற்பேட்டையில் நடைபெற்று வரும் தங்க நகைப் பூங்கா கட்டுமானப் பணி, சிட்கோ தொழிலாளா் தங்கும் விடுதி போன்றவற்றில் ஆய்வு நடத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.