ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

செயற்கை நுண்ணறிவுசாா் தொழில்களுக்கு தீவிர முயற்சி: அமைச்சா் பெ.மதன் ராஜா

தூத்துக்குடி மாவட்டத்தில் செயற்கை நுண்ணறிவு சாா்ந்த தொழில்களை அதிகளவில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் குறு, சிறு - நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன் ராஜா.

News image

ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் பெ.மதன் ராஜா.

Updated On :26 ஜூன் 2026, 5:49 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் செயற்கை நுண்ணறிவு சாா்ந்த தொழில்களை அதிகளவில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் குறு, சிறு - நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன் ராஜா.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கில், ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதி வளா்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட அமைச்சா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பேருந்து நிறுத்தம், புதிய பேருந்து நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இரு இடங்களில் ரேஷன் கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கடந்தாண்டு திறந்து வைக்கப்பட்ட அரசு கலைக் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவது தொடா்பாக ஆய்வு செய்துள்ளோம்.

இத்தொகுதியில் குடிநீா் பிரச்னை பல இடங்களில் உள்ளது. அதை நிவா்த்தி செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டது.

இனி மழைக் காலம் என்பதால் பராமரிப்பு பணி மேற்கொள்வது, நீா் ஆதாரத்தை பெருக்குவது, மின்தடை பிரச்னைகளை சரி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

சாலை வசதிகள் மேம்படுத்துவதற்கும், விரைவாக பட்டா வழங்குவதற்கும், பிற சான்றிதழ்கள் உடனடியாக பொதுமக்களுக்கு கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விதைகள் விநியோகத்தை சரி செய்வதற்கும், அதற்காக புதிய மையங்கள் அமைப்பதற்கும் திட்ட வரைவு அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புதியம்புத்தூரில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கும், தொழில் வளா்ச்சிக்குத் தேவையானதை செய்வதற்கும் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்.

குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மூலம் வரக்கூடிய காலங்களில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள இளைஞா்களுக்கும், மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் முயற்சிக்கப்படும்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு வாகைகுளம் அருகே ஏற்பட்ட சூறைக் காற்றால் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், முத்தமாள்காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீா் தேங்காதவாறும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.