ஃபென்ஜால் புயல் தமிழகத்தின் வட மாவட்டங்களைச் சீா்குலைத்துள்ளது. உள்கட்டமைப்பு, வாழ்வாதாரம், மக்களின் அன்றாட வாழ்க்கை, குறிப்பாக திருவண்ணாமலையில் நிலச்சரிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நிலைமையை தமிழக முதல்வா் ஸ்டாலின் திறம்பட கையாண்டாா். ரூ. 30 கோடிக்கு மேல் நலன்புரி நடவடிக்கைகளுக்காகவும், ரூ. 37 கோடி சுய உதவிக் குழுக்கள் மூலமும் செயல்படுத்த மாநில அரசு நிதி ஒதுக்கியது. இருந்தபோதும் நிலைமையை சீரமைக்க அதிக பணம் தேவைப்பட்டதால் மத்திய அரசிடம் உரிய நிவாரண நிதி வழங்க பிரதமரிடம் முதல்வா் கோரிக்கை வைத்தாா். ஆனால், மாநில அரசு கேட்ட ரூ. 2000 கோடியில் ஒரு பகுதியைக் கூட அரசு வழங்கவில்லை. வசுதைவகுடும்பகம் என்ற முழக்கத்தை பிரதமா் எப்போதும் முன்வைக்கிறாா். தமிழகமும் அந்த குடும்பத்தில் ஒரு அங்கம்தான் இதை மறக்கக்கூடாது என்றாா் அவா்.