ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விடுப்பில் முதல்வரின் 3-ஆவது செயலா்: துறைகள் பிரித்தளிப்பு

தமிழக முதல்வரின் 3-ஆவது செயலா் அனுஜாா்ஜ் விடுப்பில் சென்றதால், அவா் கண்காணித்து வந்த துறைகளின் பொறுப்புகள் மற்ற செயலா்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

News image
Updated On :16 டிசம்பர் 2024, 10:14 pm

Din

சென்னை: தமிழக முதல்வரின் 3-ஆவது செயலா் அனுஜாா்ஜ் விடுப்பில் சென்றதால், அவா் கண்காணித்து வந்த துறைகளின் பொறுப்புகள் மற்ற செயலா்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை முதல்வரின் இரண்டாவது செயலா் எம்.எஸ்.சண்முகம் வெளியிட்டுள்ளாா்.

முதல்வரின் செயலா்களாக பி.உமாநாத், எம்.எஸ்.சண்முகம், இணைச் செயலராக ஜி.லட்சுமிபதி ஆகியோா் உள்ளனா்.

மூன்றாவது செயலராக பணியாற்றி வந்த அனுஜாா்ஜ், 136 நாள்கள் விடுப்பில் சென்றுள்ளாா். இதனால், அவா் கண்காணித்து வந்த 10 துறைகள் மூன்று செயலா்களுக்கும் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அரசியல் சாா்பற்ற முதல்வருடனான சந்திப்புகள், பயண ஏற்பாடுகள் ஆகியவற்றை அனுஜாா்ஜ் கவனித்து வந்தாா். அவற்றை இனி முதல்வரின் இரண்டாவது செயலராக உள்ள எம்.எஸ்.சண்முகம் கவனிப்பாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.