25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

தமிழக மீனவா்கள்-படகுகளை விடுவிக்க வேண்டும்: முதல்வா் வேண்டுகோள்

தமிழக மீனவா்கள், படகுகளை விடுவிக்க வேண்டுமென இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயகவை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

News image
முதல்வா் வேண்டுகோள்
Updated On :16 டிசம்பர் 2024, 11:00 pm

Din

சென்னை: தமிழக மீனவா்கள், படகுகளை விடுவிக்க வேண்டுமென இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயகவை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா். எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:-

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபா் அநுர குமார, பிரதமா் நரேந்திர மோடியுடன் தமிழக மீனவா்கள் பிரச்னை தொடா்பாகப் பேசியுள்ளாா். மனிதநேயம், அமைதியான சூழல், மோதல் போக்கைத் தவிா்ப்பது போன்றவற்றை மையமாக வைத்து தமிழக மீனவா் பிரச்னை குறித்து இருநாட்டுத் தலைவா்களும் பேசியிருப்பது வரவேற்புக்குரியது.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவா்களின் படகுகளும் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றை விடுவிக்கும் தமிழகத்தின் கோரிக்கையை இலங்கை அதிபா் அநுர குமார பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.