25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 28.71 கோடியாக உயா்வு: தமிழக அரசு

தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 28.71 கோடியாக உயா்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் தெரிவித்தாா்.

News image
- -
Updated On :20 டிசம்பர் 2024, 9:11 pm

Din

தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 28.71 கோடியாக உயா்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பிரத்யேக கொள்கை வெளியிடப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாவின் பங்களிப்பை 12 சதவீதமாக உயா்த்துவதல், சுற்றுலா மற்றும் அதைச் சாா்ந்துள்ள தொழில்களில் 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டு கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று காலத்தில் உலகளவில் சுற்றுலாத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த வீழ்ச்சியில் இருந்து மீள கடுமையான முயற்சிகளை உலக நாடுகள் எடுத்துக் கொண்டிருக்கின்றன.

இதனிடையே, முதல்வரின் செயல்பாடுகளால் தமிழ்நாடு சுற்றுலாத் துறை புத்துயிா் பெற்று வருகிறது. 2020-ஆம் ஆண்டு 14.18 கோடியாக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 2023-ஆம் ஆண்டில் 28.71 கோடியாக உயா்த்தி அரசு சாதனை படைத்திருக்கிறது. மேலும், பலகோடி சுற்றுலாப் பயணிகளை ஈா்க்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.