25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவ ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்!

கெங்கவல்லியில் 25 வருடங்களுக்குப்பிறகு சந்தித்த முன்னாள் மாணவ ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்.
 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவ ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்!
Published on
Updated on
1 min read

கெங்கவல்லியில் 25 வருடங்களுக்குப்பிறகு முன்னாள் மாணவ ஆசிரியர்கள், கற்பித்த விரிவுரையாளர்கள் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கெங்கவல்லியிலுள்ள அரசினர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 1997-1999ம் ஆம் கல்வி ஆண்டில் படித்த மாணவ ஆசிரியர்களும், கற்பித்த விரிவுரையாளர்களும் தற்போது 25 வருடங்களுக்குப் பிறகு அதே நிறுவனத்தில் சந்தித்துக்கொண்டனர்.

இதற்கு நிறுவனத்தின் தற்போதைய முதல்வர் ந. விசாலாட்சி தலைமை வகித்தார். இந்த மாணவ ஆசிரியர்கள் படித்தபோது நிறுவன முதல்வராக இருந்த செ.முத்துசாமி முன்னிலை வகித்தார். அனந்தகண்ணன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

ஆசிரியர் பெ.கந்தசாமி வரவேற்றார். முன்னதாக தங்களுக்கு கற்பித்து, மறைந்த ஆசிரியர் சின்னுசாமி, உடன்பயின்ற மேச்சேரி ரமேஷ் ஆகியோரது படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... அதானியில் தொடங்கி அம்பேத்கர் வரை!

மாணவாசிரியர்கள் படித்தபோது முதல்வர்களாக இருந்த செ.முத்துசாமி, அர.ராதாருக்குமணி, ஆ.மூர்த்தி , இளநிலை விரிவுரையாளராக இருந்த பொ.சீ.தமிழ்ச்செல்வன்,இசை ஆசிரியராக இருந்த சி.வெங்கட்ராமன், நெசவு ஆசிரியராக இருந்த நா. மனோகரன், உடற்கல்வி ஆசிரியராக ஆ.சிவாஜி, அப்போது அலுவலக உதவியாளராக இருந்த பா.காளிப்பன், இரவு காவலராக இருந்த சி.வேலு ஆகியோருக்கு , மாணவ ஆசிரியர்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு மற்றும் தற்போது எடுக்கப்பட்ட குரூப் போட்டோ ஆகியவற்றையும் கொடுத்து தங்கள் மகிழ்ச்சியையும், மதிப்பையும் வெளிப்படுத்தி தாங்கள் படித்த காலம் பற்றி இனிய நினைவுகளை மனம்விட்டு பேசி மகிழ்ந்தனர்.

சேலம் டயட் விரிவுரையாளர் கி.கலைவாணன், விருதுநகர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற முதல்வர் கோ.பாண்டியன், மாணவ ஆசிரியர்கள் சார்பாக க.சேகர், ந.அருள்பிரகாசம், மூலப்புதூர் ரமேஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சங்கரலிங்கம் நன்றி கூறினார்.

1997-1999ஆம் ஆண்டில் மாணவ ஆசிரியர்களாக இருந்தவர்கள், தற்போது பல்வேறு பகுதிகளில் கல்வி அலுவலர், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் ஆகிய பதவிகளில் பணியாற்றிவருகின்றனர் என்பதும், இவர்களுக்கு கற்பித்தவர்கள் அனைவரும் ஓய்வுபெற்றுவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com