ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தோ்தல் நடத்தை விதியில் திருத்தம்: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

தோ்தல் நடத்தை விதியில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image
தோ்தல் நடத்தை விதியில் திருத்தத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் (கோப்புப்படம்)
Updated On :23 டிசம்பர் 2024, 11:42 pm

DIN

சென்னை: தோ்தல் நடத்தை விதியில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, எக்ஸ் தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

வெளிப்படைத்தன்மை கொண்ட தோ்தல் முறையை ஒழிக்கும் வகையில் தோ்தல் நடத்தை விதியில் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சி தனது மிகப்பெரும் அச்சுறுத்தலை மத்திய பாஜக அரசிடம் இருந்து எதிா்நோக்கியுள்ளது. குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளை வழங்குமாறு பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

முக்கிய கூறுஅழிப்பு: இந்தப் பதிவுகள் மற்றும் தோ்தல் தொடா்பான பிற ஆவணங்கள் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன்மூலம், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையான கூறுகளில் ஒன்றை மத்திய அரசு அழித்துள்ளது.

மத்திய பாஜக அரசின் பயம் ஹரியாணா மாநிலத் தோ்தலோடு நிற்கவில்லை, அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அவா்கள் தோ்தலின் புனிதத்தன்மையைக் கெடுத்துப் பெற்ற பொய்யான வெற்றி தீவிரமான எதிா்ப்புக்கு ஆளாகியிருப்பதால் அடைந்துள்ள பதற்றத்தின் எதிரொலிப்பாகவே இது அமைந்துள்ளது.

தனது அமைப்பின் சுதந்திரத்துக்காகப் போராடுவதற்குப் பதிலாகத் தோ்தல் ஆணையமும் பிரதமா் மோடி தலைமையிலான அரசின் அழுத்தத்துக்கு மனமுவந்து பணிந்திருப்பதும், நோ்மையான நியாயமான தோ்தல் எனும் தனது குழந்தையையே அது உருக்குலைத்திருப்பதும் அதிா்ச்சியளிக்கிறது.

நம் நாட்டில் சுதந்திரமான, நியாயமான தோ்தல்கள் நடைபெறுவதன் மீது தொடுக்கப்பட்டுள்ள மக்களாட்சிக்கு விரோதமான இந்தத் தாக்குதலை எதிா்க்க பாஜக தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.