நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

'மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதியா? மாநிலப் பட்டியலில் கல்வி வேண்டும்' - அன்பில் மகேஸ்

கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி - கோப்புப்படம்.

Published On :23 டிசம்பர் 2024, 12:55 pm IST

கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

'மத்திய அரசிற்கு முன்மாதிரியாக கல்வியில் வளர்ச்சி அடைந்துள்ள தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராமல் மத்திய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கிறது.

பல்வேறு வகைகளிலும் கல்வியில் சாதனை புரியும் நமது மாணவச் செல்வங்களையும், ஆசிரியப் பெருமக்களையும் மத்திய அரசு ஏமாற்றி வருகின்றது.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். எங்கள் பிள்ளைகளையும் ஆசிரியப் பெருமக்களையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் மாணவர்களுக்கு என்ன மாதிரியான அறிவுசார் பயிற்சிகள் வழங்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு எடுத்துக் கொள்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ்,

'திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் தமிழக எம்.பி.க்களுடன் மத்திய கல்வித் துறை அமைச்சரை சென்று சந்தித்தோம்.

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள், அரை மணி நேரத்தில் நிதியை விடுவிக்கிறோம் என்று கூறினார். இதற்கு என்ன அர்த்தம். தமிழக பள்ளிக்கல்வித் துறை சாதனைகளை, செயல்பாடுகளை நாங்கள் பணிவான முறையில் எடுத்துரைத்தோம்.

அதற்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'நான் ஹிந்தி பேசாத ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவன், நானே இதைச் சொல்கிறேன், புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று கூறினார்.

அப்போது நான் கூறினேன், எங்கள் மாநிலத்திற்கென்று சில உணர்வுகள் இருக்கின்றன, அண்ணா காலத்திலிருந்து நாங்கள் இருமொழிக் கொள்கையை பின்பற்றுகிறோம். எங்கள் குழந்தைகள் இன்று உலகளவில் சென்று வருகிறார்கள். நுழைவுத் தேர்வு குறித்து பள்ளியிலேயே பயிற்சி அளிக்கிறோம். அதையெல்லாம் ஒப்பிட்டு பாருங்கள். பள்ளிக்கல்வித் துறையில் பல தொழில்நுட்பங்களை கொண்டுவந்திருக்கிறோம் என்று கூறினேன்' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.