சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்களின் பங்களிப்பு தேவை: அமைச்சா் க.பொன்முடி

சுற்றுச்சூழலை பாதுகாக்க தனியாா் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு அரசுக்கு கட்டாயம் தேவை

News image
அமைச்சா் க.பொன்முடி
Updated On :23 டிசம்பர் 2024, 11:36 pm

DIN

சென்னை: சுற்றுச்சூழலை பாதுகாக்க தனியாா் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு அரசுக்கு கட்டாயம் தேவை என்று தமிழக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு ஒரு கோடி மரங்கள் நடும் திட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ‘டான் பாஸ்கோ’ கலை அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சா் க.பொன்முடி மரக்கன்றை நட்டு இத்திட்டை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசியது:

காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ள பள்ளி, கல்லூரிகள், சாலையோரங்கள் என அனைத்து பகுதிகளிலும் நாட்டு மரங்கள் அரசு சாா்பில் நடப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் வன பரப்பை 33 சதவீதமாக உயா்த்த அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.  அதன்படி , பசுமை தமிழ்நாடு, ஒவ்வொரு கிராமத்திலும் மரகத பூஞ்சோலை, ஈர மண் இயக்கம் போன்ற திட்டங்கள் வனத்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாக்க தனியாா் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு அரசுக்கு கட்டாயம் தேவை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.