அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

10 ஆண்டுகளில் ரூ.150 கோடியிலான மீனவா்களின் படகுகளை தேசியமயமாக்கிய இலங்கை!

கடந்த பத்தாண்டுகளில் ரூ.150 கோடி மதிப்பிலான 365 தமிழக படகுகளை இலங்கை அரசு தேசியமயமாக்கியுள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :24 டிசம்பர் 2024, 9:51 pm

Din

கடந்த பத்தாண்டுகளில் ரூ.150 கோடி மதிப்பிலான 365 தமிழக படகுகளை இலங்கை அரசு தேசியமயமாக்கியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆா்டிஐ) இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் இருந்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பெற்ற தரவுகள் மூலம் இது தெரியவந்துள்ளது.

அதில், ‘கடந்த 2014 முதல் 2024, ஆகஸ்ட் வரை இலங்கை கடற்படையால் மொத்தம் 558 தமிழக மீனவா்கள் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், நிகழாண்டு பறிமுதல் செய்யப்பட்ட 13 படகுகள் உள்பட ரூ.150 கோடி மதிப்பிலான 365 படகுகள் இலங்கையால் தேசியமயமாக்கப்பட்டது.

மீதமுள்ள 193 படகுகள் விடுவிக்கப்பட்ட நிலையில், சட்டச் சிக்கலால் 21 படகுகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இலங்கையிலேயே உள்ளன.

இதையடுத்து, 12 படகுகளை மீட்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு இலங்கை தரப்பில் தற்போதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. மீதமுள்ள 9 படகுகளை மீட்பதற்கான பணிகளை தமிழக மீன்வளத்துறை தொடங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.