மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தூத்துக்குடி: மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர்!

தூத்துக்குடியில் மினி டைடல் பூங்கா கட்டடத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

News image

திறப்பு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் - DIPR

Updated On :29 டிசம்பர் 2024, 11:57 am

தூத்துக்குடி மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா கட்டடத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச. 29) திறந்துவைத்தார்.

மீளவிட்டானில் 63,000 சதுர அடி பரப்பளவில் 4 தளங்களுடன் ரூ. 32.50 கோடி மதிப்பில் பல்வேறு அம்சங்களுடன் மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது.

கள ஆய்வு மேற்கொள்ள 3 நாள்கள் பயணமாக தூத்துக்குடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்றுள்ளார். இதன் ஒரு பகுதியாக மீளவிட்டானில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காவை திறந்துவைத்தார்.

பல்வகை உணவுக் கூடம், வாகன நிறுத்துமிடம், உடற்பயிற்சிக் கூடம், கலையரங்கம், தடையற்ற மின் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

மினி டைடல் பூங்கா மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.

இந்நிகழ்வில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, கீதா ஜீவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.