தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

பரங்கிமலை: மாணவியை ரயில்முன் தள்ளி கொலை செய்தவருக்கு மரண தண்டனை!

பரங்கிமலை ரயில் நிலையத்தில், மாணவியை, ரயில் முன் தள்ளி கொலை செய்தவருக்கு மரண தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News image

பரங்கிமலை சம்பவம்

Updated On :30 டிசம்பர் 2024, 3:50 pm IST

பரங்கிமலை ரயில் நிலையத்தில், கல்லூரி மாணவியை, ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சதீஷ் குற்றவாளி என சென்னை மகளிா் சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் தீா்ப்பளித்திருந்த நிலையில், இன்று தண்டன விவரத்தை வெளியிட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

பரங்கிமலை காவலா் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் என்ற இளைஞரும் காதலித்து வந்ததாகவும் ஒரு கட்டத்தில் பெற்றோரின் கடும் எதிா்ப்பால் சதீஷுடன் பழகுவதை, பேசுவதை சத்யபிரியா நிறுத்தியதாகவும் இதனால் சதீஷ் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், 2022-ஆம் ஆண்டு அக். 13-ஆம் தேதி கல்லூரிக்குச் செல்ல வழக்கம் போல பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்த சத்யபிரியாவிடம் அங்கு நின்றிருந்த சதீஷ் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில் சத்யபிரியாவை தாம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயில் முன் சதீஷ் தள்ளி விட்டு தப்பிச் சென்றாா். இதில் சத்யபிரியா உயிரிழந்தாா். இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், தலைமறைவாக இருந்த சதீஷை கைது செய்தனா். இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிா் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன் நடைபெற்று வந்தது. சிபிசிஐடி தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 70 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்ட சதீஷுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என போலீஸ் தரப்பு வழக்குரைஞா் கேட்டுக் கொண்டிருந்தார். கடந்த 24-ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இளைஞர் சதீஷ் குற்றவாளி என்று டிச.27-ஆம் தேதி நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். அதாவது, நீதிபதி ஸ்ரீதேவி பிறப்பித்த தீர்ப்பில், ‘வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

சதீஷுக்கான தண்டனை விவரம் வரும் 30-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.