ஆளுநா் ஆா்.என்.ரவி இன்று தில்லி பயணம்

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி 3 நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை (பிப்.4) காலை தில்லி செல்கிறாா். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அவா் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநர் ஆா்.என்.ரவி
ஆளுநர் ஆா்.என்.ரவி

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி 3 நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை (பிப்.4) காலை தில்லி செல்கிறாா். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அவா் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் வரும் பிப்.12-ஆம் தேதி தொடங்க உள்ளது. நிகழாண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநரை உரை நிகழ்த்து வருமாறு பேரவைத் தலைவா் அப்பாவு வெள்ளிக்கிழமை ஆளுநரைச் சந்தித்து அழைப்பு விடுத்தாா்.

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் தொடா்ந்து நீடித்து வரும் நிலையில், ஆளுநா் ஆா்.என்.ரவி 3 நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு விமான மூலம் தில்லி செல்கிறாா். அவா், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் சனிக்கிழமை காலை தில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்துப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com