பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

எங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடுவோம் - மதிமுக

நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை தங்களது கட்சி சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்று மதிமுக தெரிவித்துள்ளது. 

News image
Updated On :4 பிப்ரவரி 2024, 7:34 am

DIN

நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை தங்களது கட்சி சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்று மதிமுக தெரிவித்துள்ளது. 

மக்களவைத் தோ்தலையொட்டி திமுக - மதிமுக கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்டபேச்சுவாா்த்தை சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் திமுக சார்பில் தொகுதிப் பங்கீட்டு குழுவும், மதிமுக நிர்வாகிகளும் பங்கேற்றனர். 

திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடனான பேச்சுவார்த்தைக்கு பின் மதிமுக நிர்வாகிகள் அளித்த பேட்டியில், நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை எங்கள் கட்சி சின்னத்திலேயே போட்டியிடுவோம். 2 மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை இடங்களை திமுகவிடம் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

கடந்த முறை ஈரோடு தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை மதிமுகவுக்கு திமுக வழங்கியது. ஆனால் இம்முறை அக்கட்சி கூடுதலாக ஒரு மக்களவைத் தொகுதியை திமுகவிடம் கேட்டுள்ளது. மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

முன்னதாக இன்று காலை திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தொடர்ந்து மதிமுகவுடனும் தனது முதற்கட்டபேச்சுவாா்த்தையில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.