பாஜகவுடன் இணையும் சரத்குமாருக்கு ஒரு தொகுதியா?

சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சரத்குமார் (கோப்புப்படம்)
சரத்குமார் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக சரத்குமார் பேசும் போது, “வெளிநாட்டில் இந்தியா்களுக்கு அதிக மதிப்பு கிடைக்கிறது. அதற்கு பிரதமா் மோடிதான் காரணம். அவா் இந்திய பொருளாதாரத்தை உயா்த்தியிருக்கிறாா். உலகத்தின் பாா்வையில் இந்தியாவை உயா்த்தியவா் பிரதமா் மோடிதான். பாஜகவோடு சரத்குமாா் கூட்டணி வைக்கப் போகிறாா் என்று நினைத்தால் நினைத்துக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்து இருந்தார்.

மேலும், "அதிக தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதே எங்களின் நோக்கமாக உள்ளது" என்றும் முன்னதாக கூறியிருந்தார்.

இத்தைகைய சூழலில், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரத்குமார் தரப்பில் இருந்து பாஜகவிடன் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய இரண்டு தொகுதிகளை கேட்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பதாக தெரிகிறது. முன்னதாக சரத்குமார்  தென்காசி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

ஆனால், பாஜக சரத்குமாரின் கட்சிக்கு ஒரு தொகுதி மட்டுமே தரவுள்ளதாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பாஜகவானது தேமுதிக, பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி என சிறுகட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3-வது அணியாக செயல்படவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com