தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

1500 மருத்துவமனைகளுக்கு காப்பீட்டு திட்டம் விரிவாக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கோவை சூலூர் பகுதியில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் 3 அதிநவீன மருத்துவ உபகரணங்களை தமிழ்நாடு என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  திறந்து வைத்தார்.

Published On :


கோவை: கோவை சூலூர் பகுதியில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் 3 அதிநவீன மருத்துவ உபகரணங்களை தமிழ்நாடு என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இதயமாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் செய்து வரும் நிலையில், தற்போது கல்லீரல், தோல் மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மச்சை அறுவை சிகிச்சை உள்பட 8 பொறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளில் வெற்றிகரமாக செய்து முடிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்தினரும்  ரூ.5 லட்சம் அளவில் மருத்துவ வசதிகள் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். 1500  மருத்துவமனைகளுக்கு காப்பீட்டு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பான மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.