கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

சீமைக் கருவேல மரங்களை அகற்ற 2 வாரங்களில் நிதியை விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சீமைக் கருவேல மரங்களை அகற்ற கனிம நிதியை இரண்டு வாரங்களில் விடுவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி....

The High Court orders the release of funds within 2 weeks to remove Seemai Karuvelam trees

சென்னை உயர் நீதிமன்றம்

Published On :

சீமைக் கருவேல மரங்களை அகற்ற கனிம நிதியை இரண்டு வாரங்களில் விடுவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலா் வைகோ உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கை விசாரித்து வரும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமா்வு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கருவேல மரங்களை அகற்ற ரூ.5 கோடி ஒதுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்களை அகற்ற கனிம நிதியை இரண்டு வாரங்களில் விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற முன்னுரிமை வழங்க வேண்டும் என அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை அக்டோபர் 9-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Summary

The High Court has ordered the release of mineral development funds within two weeks to remove Seemai Karuvelam trees.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.