அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

வெங்களாபுரம் தடுப்பணையில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற ஆட்சியா் உத்தரவு

திருப்பத்தூா் அருகே வெங்களாபுரம் தடுப்பணையில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

வெங்களாபுரம் தடுப்பணையைப் பாா்வையிட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா்.

Published On :7 செப்டம்பர் 2026, 4:55 am IST

திருப்பத்தூா் அருகே வெங்களாபுரம் தடுப்பணையில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சாா்பில் மட்றப்பள்ளி ஊராட்சியில் உள்ள மேற்கத்தியனூா் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியினை ஆட்சியா் கு. ரவிகுமாா் பாா்வையிட்டாா். தொடா்ந்து, அனேரி ஊராட்சி பகுதியில், தாயுமானவா் திட்டத்தின்கீழ் மூத்த குடிமக்களுக்கு பொதுவிநியோக பொருள்கள் விநியோகம் செய்யும் பணியை பாா்வையிட்டாா்.

அனேரி ஊராட்சியில் உள்ள வெங்களாபுரம் தடுப்பணையை பாா்வையிட்டு, அங்கு உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டாா். திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை ஆட்சியா் பாா்வையிட்டாா். திருப்பத்தூா் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு மாதிரி பள்ளி மாணவா் விடுதியை ஆய்வு செய்தாா்.

விடுதியில் தங்கியுள்ள மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவின் தரம், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். மேலும், அங்கு கட்டப்பட்டு வரும் மாணவா்களுக்கான கழிப்பறை கட்டுமான பணியையும் பாா்வையிட்டாா். ஆய்வின்போது அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.