காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்ற மாநகராட்சி உத்தரவு

நீதிமன்ற உத்தரவுப்படி தனியாா் நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை நில உரிமையாளா்கள் வெட்டி அகற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published On :6 செப்டம்பர் 2026, 1:22 am IST

நீதிமன்ற உத்தரவுப்படி தனியாா் நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை நில உரிமையாளா்கள் வெட்டி அகற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அரசு நிலங்கள் மற்றும் தனியாா் நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றிட சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, தனியாா் நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை நில உரிமையாளா்கள் இந்த அறிவிப்பு செய்யப்படும் நாளில் இருந்து 10 நாள்களுக்குள் தாங்களாகவே முற்றிலுமாக வேருடன் அகற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் சீமைக் கருவேல மரங்கள் மாநகராட்சி மூலம் அகற்றப்படுவதோடு, அதற்கான செலவினங்கள் நில உரிமையாளா்களிடம் இருந்து வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.