'லேகியம் விற்பவர் மாதிரி அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கிறார்'

லேகியம் விற்பவர் மாதிரி அண்ணாமலை  பேசிக் கொண்டிருக்கிறார் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார்  தெரிவித்துள்ளார்.
'லேகியம் விற்பவர் மாதிரி அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கிறார்'

லேகியம் விற்பவர் மாதிரி அண்ணாமலை  பேசிக் கொண்டிருக்கிறார் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார்  தெரிவித்துள்ளார்.

மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வாக்கு சேகரிக்கக் கூட உரிமை கிடையாது.  
இரட்டை இலை சின்னம் விவாகரத்தில் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் தெளிவாக தீர்ப்புகளை அளித்துவிட்டது. பன்னீர்செல்வம் விரக்தியின் உச்சத்தில் பேசி வருகிறார்.

பேரறிஞர் அண்ணாவை, அம்மாவை , அதிமுகவை பற்றி அண்ணாமலை பேசிய பின்னரும், தன்மானத்தை இழந்து எங்களால் அவர்களுடன் இருக்க முடியாது.

அதிமுக இயக்கத்தின் மதிப்பீடு அவருக்கு தெரியவில்லை. நான் மூன்று முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அமைச்சராக ஆகியுள்ளேன் ஆனால் அண்ணாமலை கவுன்சிலராககூட ஜெயிக்காதவர். அரசியல் அனுபவம் அவருக்கில்லை.

தேர்தலில் நின்று வென்றால் தான் பக்குவம் வரும். லேகியம் விற்பவர் மாதிரி அவர் பேசிக் கொண்டிருக்கிறார். பாஜகவைத் தவிர எந்த கட்சி வந்தாலும் தாய் உள்ளதோடு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம் எனக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com