ரூ.1.70 கோடி மதிப்புள்ள உயர் ரக கைக்கடிகாரங்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் பயணிடமிருந்து உயர் ரக கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட கைக்கடிகாரங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட கைக்கடிகாரங்கள்

சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இரண்டு உயர் ரக கைக்கடிகாரங்கள் மீட்கப்பட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹாங்காங்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை வந்த பயணி ஒருவரிடம்  சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சுற்றுலா பயணியாக ஹாங்காங் சென்றிருந்த அவர் சந்தேகத்துக்குரிய வகையில் பதிலளித்துள்ளார்.

ரூ.1.7 கோடி மதிப்புள்ள பேட்டிக் பிலிப்ஸ் 5740, பெர்கெட் 2759 ஆகிய இரு கைக்கடிகாரங்கள் அவரிடமிருந்த பார்சலில் இருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது.

பயணி, இங்கு கொண்டுவரும் முகவராக செயல்பட்டதும் பணத்திற்காக இந்த செயலில் அவர் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சுற்றுலா பயணியான அவரிடம் சிங்கப்பூரில் இருவர் பார்சலைக் கொடுத்து கொண்டு செல்ல சொன்னதாகவும் சென்னையில் அவர்களின் நண்பர்கள் பெற்று கொண்டு பணம் தருவர் என்று குறிப்பிட்டதையும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த பயணி கைது செய்யப்பட்டதாகவும் விசாரணை தொடர்ந்து வருவதாகவும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் ஆர்.ஸ்ரீனிவாச நாயக் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com