5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு! டி.கே. சிவகுமார் அறிவிப்பு! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய டிஎன்எஸ்டிசி செயலி!
/

ஜெ.பி.நட்டாவை நாளை சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவை சென்னையில் நாளை சந்திக்கிறார்.

News image

கோப்புப்படம்

Updated On :11 பிப்ரவரி 2024, 10:29 pm IST

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவை சென்னையில் நாளை சந்திக்கிறார்.

சென்னை வரும் அவரை தனியார் ஓட்டலில் ஓபிஎஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்திக்க உள்ளனர். அண்மையில் பேசிய ஓ.பன்னீர்செலவம், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தாங்கள் ஏற்கெனவே அங்கம் வகித்து வருவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை ’என் மண் என் மக்கள்’ யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ராமேஸ்வரத்தில தொடங்கி வைத்தாா். இந்த பேரணி வரும் 11ஆம் தேதி சென்னையில் நிறைவு பெறுகிறது. இதில் பாஜக தேசிய தலைவா் ஜே.பி.நட்டா பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் சென்னை பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. மேலும் தோ்தல் நெருங்கும் நேரத்தில் வடமாநிலங்களில் பாஜக நடத்தும் பேரணியில் கலவரம் ஏற்படுகிறது . இதை கருத்தில் கொண்டு பேரணிக்கு அனுமதி மறுக்கப்படுவதாக காவல் துறை தெரிவித்துள்ளது. 

அதே நேரத்தில், சென்னை சென்ட்ரல் அருகே மின்ட் தங்க சாலையில் பாஜக பொதுக்கூட்டம் நடத்த மட்டும் காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.