
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். அப்போது, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தயார் நிலையில் உள்ளது. உபரி நீர் கிடைத்ததும் தொடங்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 2016-ஆம் ஆண்டுக்கு முன்பு அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் பெற வரும் 29ஆம் தேதி கடைசி நாள் என்று வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் கட்டி விற்காமல் உள்ள 3,000 வீடுகள் வாடகைக் குடியிருப்பாக மாற்றப்படும் என அமைச்சர் முத்துசாமி குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், கடந்த 2016ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட அல்லது விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனை பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017ஆம் ஆண்டு விதிகளுக்கு உள்பட்டு, எவ்வித மாற்றமும் இல்லாமல் நடப்பு பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு ஏற்கனவே செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
அதாவது, இந்த திட்டத்தின் கீழ் மனை அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இந்த இறுதி வாய்ப்பினை தவறான பயன்படுத்திக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.