மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 10 பேர் பலி

விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பத்து பேர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்தனர்.

News image

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து

Updated On :17 பிப்ரவரி 2024, 1:54 pm IST

விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே சிவகாசியை சேர்ந்த விக்னேஷ்(45) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு தொழிற்சாலையில் 55 அறைகளில் 150க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டாசு தயாரிக்கத் தேவையான மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென வெடித்து சிதறியதில் 5-அறைகள் தரைமட்டமாகின.

இந்த வெடி விபத்தில் அங்கு பணியிலிருந்த 5 விருதுநகர் மாவட்டம் ராமுதேவன்பட்டி வின்னர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் ரமேஷ் (26), கருப்பசாமி (29), அம்பிகா ( 30), முருகஜோதி (50), முத்து (45), சாந்தா (35), குருசாமி (50), 5 பெண் 4 ஆண் தொழிலாளர்கள் உள்பட 10 பேர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 7 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி மற்றும் கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் அறிந்த சிவகாசி, வெம்பக்கோட்டை மற்றும் ஏழாயிரம் பண்ணை தீயணைப்புத்துறையினர். விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.