15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வடசென்னை வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி நிதி

வடசென்னையின் புதிய காலத்திற்கான மீள் அமைப்பு

News image
Updated On :19 பிப்ரவரி 2024, 5:11 am

வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்குத் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அதில், வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்மூலம் வடசென்னையில் புதிய குடியிருப்புகள், திறன்மிகு பள்ளிகள் அமைத்து ஏரிகள் சீரமைக்கப்படும்.

மேலும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை தீவுத்திடல் மேம்பாட்டுத் திட்டம் அறிமுகம். சென்னை பெசன்ட் நகர், கோவளம் உள்ளிட்ட கடற்கரைகள் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.